கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை: பிரதமர் மோடி

புதுடெல்லி,

கொரோனா முன்னெச்சரிக்கை  விதிமுறைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-  கொரோனா விவகாரத்தில் கட்டுப்பாடுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. 

கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். வழிகாட்டுதல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.  கொரோனா விவகாரத்தில், வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு நேற்று பரிந்துரைத்தது கவனிக்கத்தக்கது. 

Google+ Linkedin Youtube