அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்

சென்னை

கவிஞர் வைரமுத்து கொரோனா குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த பாடலை பாடி இசை அமைத்து வெளியிட்டுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம். 

கவிஞர் வைரமுத்து கொரோனா அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது.சத்தமில்லாமல் நுழைந்து, யுத்தமில்லாமல் அழிப்பதாகவும் அதனை கொல்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகை நிலைகுலையச் செய்துள்ளது. தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள், கொஞ்சம் அச்சமும் இருக்கட்டும், அதை பற்றிய தெளிவும் இருக்கட்டும் என எழுதியுள்ளார் வைரமுத்து. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Google+ Linkedin Youtube