மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்வு

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மாநில தலைநகரான மும்பையில் இந்த கொடிய கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அதுமட்டுமின்றி மும்பை புறநகர் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி மராட்டியத்தில் 308 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது தெரியவந்தது. 

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்,மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.

Google+ Linkedin Youtube