கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா விழி பிதுங்கி நிற்கிறது. உலகளவில் அமெரிக்காவில் தான் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.  

 அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  865 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது.  அமெரிக்காவில் திங்களன்று 8.30 மணி அளவில் 3,008ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, செவ்வாயன்று, 8.30 மணி அளவில் 3,873ஆக அதிகரித்தது.  அமெரிக்காவில் தற்போது 188,578 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Google+ Linkedin Youtube