கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி

பெய்ஜிங்,

கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட இடமான சீனாவில் தற்போது அந்நோய்த்தொற்று பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 3,300 பேர் உயிரிழந்துள்ளனர்.  

சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களுக்காக இன்று காலை 10 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.   சாலைகளில் சென்ற மக்களும், வாகனங்களும் ஆங்கேங்கே நிறுத்தப்பட்டது. மக்கள் தாங்கள் நின்ற இடங்களில் இருந்தவாறு 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Google+ Linkedin Youtube