தாய்– மகளை கட்டிப்போட்டி 141 பவுன் கொள்ளை: மனுவை ஏற்க நீதிபதி மறுத்ததால் சரண் அடைய வந்தவர் கைது

சங்கரன்கோவில், 

பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டை சேர்ந்த மரக்கடை அதிபர் பெஞ்சமின் பெலிகான் (வயது 61). இவருடைய மனைவி மார்ட்லின் (55). இவர்களுடைய மகள் சுகிமேரி. கடந்த 25–ந் தேதி மதியம் மார்ட்லின், சுகிமேரி ஆகிய இருவரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டுக்குள் புகுந்த கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் தாய்– மகளை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த 141 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். மேலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 கார்களையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சோதனை சாவடியில் ஒரு கார் போலீசாரிடம் சிக்கியது. அந்த காருடன் இமான் என்ற கொள்ளையனும் சிக்கினான். அவனை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மற்றொரு காருடன் தப்பிச் சென்றது ராமயன்பட்டியைச் சேர்ந்த பிரபு என்ற லட்சுமணன், அவனுடைய தம்பி மதன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அந்த கார் மானூர் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரை போலீசார் மீட்டனர்.

இந்நிலையில் சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரபு என்ற லட்சுமணன் (26) என்பவர் சரணடைய வந்தார். அவரை விசாரித்த நீதிபதி அகிலாதேவி, முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவர் சரண் அடைய மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதையடுத்து நெல்லையில் இருந்து வந்த குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனர் வரதராஜன் தலைமையிலான போலீசார் லட்சுமணனை கைது செய்தனர். இதனால் சங்கரன்கோவில் கோர்ட்டில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Google+ Linkedin Youtube