ஆர்.எஸ்.எஸ். குறித்து கிண்டல்: பெண்களை அரை கால் சட்டையில் பார்க்க விரும்புகிறாரா? ராகுல் காந்திக்கு, பா.ஜனதா பதிலடி

அமேதி, 

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார். வதோதராவில் மாணவர்கள் மத்தியில் நேற்று அவர் பேசுகையில், பா.ஜனதாவின் முக்கிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அதில் எத்தனை பெண்கள் உள்ளனர். யாராவது ஒருவரையாவது அரைகால் சட்டை அணிவகுப்பில் காண முடிகிறதா? ஆனால் காங்கிரஸ் கட்சியில் அனைத்து மட்டத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

ராகுல் காந்தியின் கிண்டல் பேச்சுக்கு மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவர்களுள் ஒருவருமான ஸ்மிரிதி இரானி பதிலடி கொடுத்து உள்ளார்.

 இது குறித்து அமேதியில் அவர் கூறுகையில், ராகுல் காந்தியின் பேச்சு கண்டனத்துக்கு உரியது. பெண்கள் மிகவும் அமைதியானவர்கள். ஆனால் அதே சமயம் திறமையானவர்கள். அரை கால் சட்டையில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கி உள்ளதா? அதை தான் அவர் விரும்புகிறாரா? தன்னுடைய அநாகரிகமான கருத்து மூலம் ஒட்டு மொத்த பெண்களையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தி விட்டார் என்றார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரைகால் சட்டையை முன்பு அணிந்து இருந்தனர். ஆனால் தற்போது முழு கால் சட்டைக்கு (பேண்ட்) மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube