வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 332.38 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.02 புள்ளிகள் உயர்ந்து 32,028.43 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.06% வரை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 40.50 புள்ளிகள் அதிகரித்து 10,057.45 புள்ளிகளாக உள்ளது.

ஆக்சிஸ் வங்கி, எம் & எம், என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. மேலும் பாரதி ஏர்டெல் 4.32% உயர்ந்து ரூ.400.65 ஆகவும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் 1.54% உயர்ந்து ரூ.856.35 ஆகவும் உள்ளது. 

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.23%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.46% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.22% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.31% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Google+ Linkedin Youtube