மீண்டும் புறக்கணிக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா

நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரிலும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றது.

இரு தொடர்களிலுமே இந்திய அணியில் அனுபவ வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

அவர்களுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திரா சாஹல் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டி தொடர் விரைவில் இந்தியாவில் நடக்கவுள்ளது.

இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு மீண்டும் அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.


Google+ Linkedin Youtube