இந்தியாவுக்கு வருவது எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் - டேவிட் வார்னர் உருக்கம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3  2 ஓவர் 0 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 20  ஓவர்  தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றிருந்தன.

அதன் பின் நடைபெறவிருந்த மூன்றாவது 20  ஓவர் போட்டி மழையின் காரணமாக ரத்தானதால், தொடர் 1-1 என்று சமநிலையில் முடிந்தது.

தொடர் தற்போது முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா திரும்பும் டேவிட் வார்னர், தன்னுடைய இன்ஸ்டாகிராமில், இந்திய அணியுடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி எனவும் இந்த நாட்டுக்கு வருவது எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐதராபாத்தில் நடந்த தாக்குதலை மறக்க வேண்டும் என்று நினைப்பதாகவும், அதுமட்டுமின்றி இந்திய ரசிகர்கள் எப்போதுமே சிறப்பாகவே இருந்திருக்கிறார்கள். எங்களை விளையாட அழைத்ததற்கு நன்றி. அடுத்த வருடம் சந்திக்கலாம் எனவும் பதிவேற்றம் செய்திருந்தார்.

ஆஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித் காயம் காரணமாக 20 ஓவர்  தொடரில் பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக 20  ஓவர் தொடரின் தலைவராக வார்னர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube