கல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....

அயர்லாந்தின் வடக்குப் பகுதியில் குடியிருந்துவரும் இரட்டை சகோதரிகள் ஒருவகை அரிதான நோயினால் தாக்கப்பட்டு சிறுகச் சிறுக கல்லாக உருமாறி வருகின்றனர்.

வடக்கு அயர்லாந்தின் ஆண்ட்ரிம் கவுண்டி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர்கள் 26 வயதான Zoe Buxton மற்றும் Lucy Fretwell.

இவர்களுக்கு FOP எனப்படும் உலகில் 800 நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை நோய் தாக்கி கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இருவரும் சிறுவயதில் இருக்கும்போதே கால்விரல் பகுதியில் முழை ஒன்று வளர்ந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் அதனை முக்கியத்துவம் அளிக்கும் அளவுக்கு பெரிதல்ல எனவும் நாளடைவில் குணமாகும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளனர்.

இது தொடர்பில் பேசிய ஸோ, தமக்கு 5 வயதாக இருக்கும்போது ஒருமுறை கால்தவறி விழுந்து முழங்கையை உடைத்துக் கொண்டதாகவும், வைத்தியம் பார்த்த பின்னரும் இதுவரை தமக்கு கையை நிர்வர்த்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஸோ மட்டுமல்ல அவரது சகோதரி லூசி கூட, தமது 8வது வயதில் இதேப்பொன்ற ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு FOP எனப்படும் நோயால் தாக்கப்பட்டுள்ளார்.

தற்போது உடலின் குறிப்பிட்ட எந்த பாகத்தையும் அசைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஸோ, லூசி சகோதரிகளுக்கு. ஸோ தமது கணவருடன் குடும்பம் நடத்த மிகவும் ஆவலுடன் இருக்கிறார்.

ஆனால் தமது குழந்தைகளுக்கும் இதே நோய் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது லண்டனில் பரிசோதனையில் ஈடுபட்டுவரும் சகோதரிகள் இருவரும், குறித்த நோயில் இருந்து விடுபட்டு வருவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Google+ Linkedin Youtube