முதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு

நடிகை சமந்தா  நாக சைதன்யாவை திருமணம் செய்த கையோடு தனது பெயருடன் ‘அக்கினேனி’ என்ற வார்த்தையை இணைத்திருக்கிறார். இது நாக சைதன்யாவின் குடும்ப பெயராகும். முன்னதாக திருமண நெருக்கத்தில் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த சமந்தா தற்போது மற்றொரு ஷாக் தந்திருக்கிறார்.


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் முதலிரவில் இருப்பது போன்ற படம் போட்டு, “மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் ” என குறிப்பிட்டுள்ளார்.கட்டிலின் அருகே இரவு கவுன் அணிந்து பின்பக்கமாக திரும்பி நின்றபடி போஸ் தந்திருக்கிறார் சமந்தா. கவுனின் முதுகுபகுதியில் மிஸர்ஸ் அக்கினேனி என எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கிறது. இது குடும்பத்தினர் வழக்கமாக அணிந்து கொள்ளும் உடை பாணியா? அல்லது தான் அணியும் கவுனில் மட்டும் ஸ்பெஷலாக மிஸர்ஸ் அக்கினேனி பெயரை பிரத்யேகமாக எம்பிராய்டரி செய்திருக்கிறாரா என்பதுபற்றி விளக்கம் இல்லை. 

Google+LinkedinYoutube