தங்கம் - பிளாட்டினம் எவ்வாறு உருவாயின விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆயிரம் பில்லியன் பில்லியன் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் ஹைட்ரா என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள என்.ஜி.சி. 4993 என்ற நட்சத்திர மண்டலத்தில் இந்த வெடிப்பு நடந்துள்ளது.

இந்த வெடிப்பு, 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது டைனோசர்கள் பூமியில் இருந்த காலத்தில் நடந்தது. அதன் ஒளியும், ஈர்ப்பு அலைகளும் இப்போது தான் நம்மை வந்து அடைந்துள்ளன.

சூரியனைவிட 10 முதல் 20 சதவிகிதம் அதிக நிறை கொண்ட இந்த நட்சத்திரங்களின் குறுக்களவு 30 கிலோ மீட்டர் அளவிற்கு அதிகமாக இருக்காது. நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல், நீண்ட தொலைவில் நடந்த இந்த பெரும் மோதலின் அதிர்வு இப்போதுதான் பூமியை வந்து அடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இந்த மோதலின் அதிர்வை உணர உதவியது.

இதுபோன்ற இணைப்பின் மூலமாகத்தான், பேரண்டத்தில் உள்ள தங்கமும், பிளாட்டினமும் இதற்கு முன்பு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த பிரளய நிகழ்வின் மூலமாக ஏற்பட்ட ஈர்ப்பு அலைகளை, லிகோ-விர்கோ குழு ஆகஸ்டு 17ஆம் தேதி கணக்கிட்டுள்ளது.

இவை, சூப்பர்நோவா நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த நட்சத்திரங்களின் உட்கருவில் இருந்து விடுபட்ட நசுங்கிய பகுதிகளாகும்.

நட்சத்திரங்கள் நசுங்கும் நிகழ்ச்சிப் போக்கில், அதன் அணுக்களில் உள்ள புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்கள் மின்னூட்டம் பெற்று, முழுமையாக ஒரு நியூட்ரான்களால் ஆன பொருளை உருவாக்குகிறது.

இத்தகைய மிச்சப் பொருள்கள் மிகவும் அழுத்தம் வாய்ந்தவையாக இருக்கும். உதாரணமாக, ஒரு ஸ்பூனில்  எடுக்கும் பொருள், பில்லியன் டன் எடை உள்ளதாக இருக்கும்.

இவை, சூப்பர் நோவாவைவிட 1000 மடங்கு சக்திவாய்ந்த, கிலோநோவா என்ற ஒரு வெடிப்பை காண்பித்துள்ளது.

இவ்வாறான பெரிய அளவிலாக ஆற்றலின் வெளியேற்றமே, தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட அரியவகை உலோகங்களின் உருவாக்கத்திற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

"நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதுவதால், தங்கம், பிளாட்டினம் போன்ற பல கனத்த வேதியியல் தன்மை உள்ள தனிமங்கள், விண்வெளியில் அதிக வேகத்தில் சிதறுவதை உலகில் உள்ள சிறந்த தொலைநோக்கிகளை கொண்டு கவனித்துள்ளோம்," என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இரும்பைவிட அதிக வலுவான தனிமங்களின் தோற்றம் குறித்து பல ஆண்டுகளாக நீடித்த மர்ம முடிச்சுகளை இந்த முடிவுகள் அவிழ்த்துள்ளன என்றும் தெரிவித்தனர்.

Google+ Linkedin Youtube