உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஜிதுராய்–ஹீனா சித்து ஜோடி 483.4 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோபர்விலே–போகியூட் 481.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீனாவின் கேய்–யங் ஜோடி 418.2 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றது. கலப்பு அணிகள் பிரிவு போட்டி பதக்கத்துடன் அதிகாரப்பூர்வமாக அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். 2020–ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்திய பந்தயம் அறிமுகம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Google+LinkedinYoutube