கடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை,

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை வெளுத்து வாங்கிய மழை, நேற்று முன்தினம் பகலில் ஓய்ந்து இருந்தது. ஆனால் அன்று நள்ளிரவுக்கு பிறகு சென்னை நகரிலும் காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பிற கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கடல் சீற்றத்தினால் வேதாரண்யத்தினை சேர்ந்த மீனவர்கள் 5ம் நாளாக கடலுக்கு செல்லவில்லை.  ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Google+LinkedinYoutube