குமரி மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஆரல்வாய்மொழி, 

குமரி மாவட்டம் களியக்காவிளை திருத்துவபுரத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி லைலா குமாரி (வயது 42). இவர், நாகர்கோவில் வடசேரியில் திருமண தகவல் மையம் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் அந்த திருமண தகவல் மையத்தில் சோதனை செய்து லைலா குமாரியை கைது செய்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கை யையும் மீறி லைலா குமாரி தொடர்ந்து குற்றச் செயல் களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இதற் கான அனுமதி கோரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானுக்கு, போலீஸ் சூப்பிரண்டு துரை பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் நேற்று அனுமதி வழங்கினார். இதனையடுத்து லைலா குமாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதுபோல, திருச்சி விராலிமலையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு லாரியில் மணல் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட களியக்காவிளை மீனச்சல் எறுத்தாவூரை சேர்ந்த பிஜூ (32) என்பவரையும் ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Google+LinkedinYoutube