இனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே

லட்சுமி மேனன் நடித்தாலே, படம் ஹிட் என, கூறப்பட்ட காலமெல்லாம் உண்டு. தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் ஒரே மாதிரியான கிராமப்புற படங்களில் நடிப்பது அலுப்பு தட்டுகிறது. இனி படங்களில் நடிக்கப் போவது இல்லை என கூறிச் சென்றார். அதற்கு பின், மனம் மாறி மீண்டும் நடிக்க வந்தாலும் ஏற்கனவே இருந்தது போல் அவருக்கு போதிய வரவேற்பு இல்லை. அவர் நடித்த மிருதன் றெக்க போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை.


மேலும், அதில் அவரது நடிப்பும் பெரிதாக பேசப்படவில்லை. வாய்ப்பின்றி, வீட்டில் முடங்கி கிடந்த அவர், தற்போது, பிரபுதேவா ஜோடியாக, யங் மங் சங் என்ற படத்தில் நடித்து வருகிறார். பரதநாட்டிய பெண்ணாக நடிக்கும் அவருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கண்டிஷன் விதிக்கப்பட்டது. அதன்படி 2 மாதம் அவர் கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடை குறைத்திருக்கிறார்.

ஸ்லிம்மானதும் நடிக்கலாம் என்று நினைத்த லட்சுமியை முதலில் கல்லூரி படிப்பை முடி அப்புறமாக நடிக்கப் போகலாம் என்று அவரது அம்மா கறாராக கூறிவிட்டாராம். இதனால் கல்லூரி படிப்பு முடியும் வரை இனி லட்சுமி மேனன் படங்களில் நடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.

Google+LinkedinYoutube