சாமிதோப்பில் விமான நிலையத்துக்கான ஆய்வுப் பணிகள் தீவிரம்

தென்தாமரைக்குளம்,

குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான விஜயகுமார், இந்த மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதைத்தொடர்ந்து குமரி மாவட்டம் சாமிதோப்பில் விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு முதல்கட்ட சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ.11½ லட்சம் ஒதுக்கீடு செய்தது.

இந்தநிலையில் சாமிதோப்பு பகுதியில் உள்ள 850 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து கல் நாட்டும் பணிகளும், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தனியார் நிலங்கள் பாதிக்காத வகையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தால் செயற்கைக்கோள் உதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியை விஜயகுமார் எம்.பி. நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நில அளவீடு பணி, எல்கைகளை அடையாளம் காண கல்நாட்டும் பணி மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுப்பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு ஆய்வை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன என்ஜினீயர்கள், பணியாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சாமிதோப்பில் அமைய உள்ள விமான நிலையம் குமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவாகும். இத்திட்டம் நிறைவேறுவதன் மூலம் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்கள் வளம் பெறும்.

விமான நிலையத்துக்கான முதல்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுப் பணி இன்னும் 15 நாட்களில் முடிவடையும். பின்னர் இதுதொடர்பான அறிக்கை டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு அடுத்தக் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும். அதற்காக டெல்லியில் இருந்து உயர் அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட இருக்கிறார்கள். இன்னும் 3 ஆண்டுகளுக்குள், அதாவது 2020–ம் ஆண்டுக்குள் இங்கு விமானம் வந்திறங்கும். இந்த “கிரீன் பீல்டு“ விமான நிலையம் தென்தமிழகத்தில் முதல்தரமான விமான நிலையமாக இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் ஞானசேகர், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், வடக்கு தாமரைக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சிவராகுல், ஆய்வாளர் சுஜித் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.தென்தாமரைக்குளம்,

குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான விஜயகுமார், இந்த மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதைத்தொடர்ந்து குமரி மாவட்டம் சாமிதோப்பில் விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு முதல்கட்ட சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ.11½ லட்சம் ஒதுக்கீடு செய்தது.

இந்தநிலையில் சாமிதோப்பு பகுதியில் உள்ள 850 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து கல் நாட்டும் பணிகளும், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தனியார் நிலங்கள் பாதிக்காத வகையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தால் செயற்கைக்கோள் உதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியை விஜயகுமார் எம்.பி. நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நில அளவீடு பணி, எல்கைகளை அடையாளம் காண கல்நாட்டும் பணி மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுப்பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு ஆய்வை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன என்ஜினீயர்கள், பணியாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சாமிதோப்பில் அமைய உள்ள விமான நிலையம் குமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவாகும். இத்திட்டம் நிறைவேறுவதன் மூலம் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்கள் வளம் பெறும்.

விமான நிலையத்துக்கான முதல்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுப் பணி இன்னும் 15 நாட்களில் முடிவடையும். பின்னர் இதுதொடர்பான அறிக்கை டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு அடுத்தக் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும். அதற்காக டெல்லியில் இருந்து உயர் அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட இருக்கிறார்கள். இன்னும் 3 ஆண்டுகளுக்குள், அதாவது 2020–ம் ஆண்டுக்குள் இங்கு விமானம் வந்திறங்கும். இந்த “கிரீன் பீல்டு“ விமான நிலையம் தென்தமிழகத்தில் முதல்தரமான விமான நிலையமாக இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் ஞானசேகர், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், வடக்கு தாமரைக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சிவராகுல், ஆய்வாளர் சுஜித் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

Google+ Linkedin Youtube