அருணாச்சல பிரதேசம்: இந்தியா-சீனா எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பெய்ஜிங்,

இந்தியா- சீனா எல்லை அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள  சிசாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானது.  

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சில வினாடிகள் உணரப்பட்டது. இந்தியா-சீனா எல்லையையொட்டியுள்ள பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால், உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. 

Google+LinkedinYoutube