ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு திருநெல்வேலியில்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே 16) 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மட்டும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், நாங்குநேரி வட்டாரத்தில் 32 பேருக்கும், பாப்பாக்குடியில் 3 பேருக்கும், வள்ளியூரில் 2 பேருக்கும், ராதாபுரம், மானூர், நெல்லை மாநகராட்சி பகுதியில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மகராராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.

நாங்குநேரி வட்டாரத்தை பொறுத்தவரையில், விஜயஅச்சம்பாடு கிராமத்திற்கு வந்த 11 பெண்கள் உள்பட 26 பேரும், அ.சாத்தான்குளத்தை சேர்ந்த ஒரே வீட்டில் வசிக்கும் 5 பேரும், முனைஞ்சிப்பட்டி திருமலைபுரத்தை சேர்ந்த 51 வயது ஆணுக்கும், கீழ்பாப்பாக்குடியை சேர்ந்த ஒரு ஆண், முக்கூடலை சேர்ந்த இருவரும் அடங்கும். வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த இருவருக்கும், ராதாபுரத்தில் ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube