பிஎஸ்என்எல் அதிரடி திட்டங்கள் அறிவிப்பு

பிஎஸ்என்எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சில திட்டங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. மேலும் சில கூடுதல் சலுகைகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

 பிஎஸ்என்எல் தமிழகம் முழுவதும் பல திட்டங்கள்

பிஎஸ்என்எல் தமிழகம் முழுவதும் பல திட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது. ஜூலை 31,2020 முதல் பதஞ்சலி திட்டங்கள் உட்பட பல வவுச்சர்களை திரும்பப் பெறுவதாக நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் 2018 ஆண்டின் நடுப்பகுதியில் பல பதஞ்சலி திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

 பதஞ்சலி திட்டத்தின்கீழ் பல சலுகைகள்

பதஞ்சலி திட்டத்தின்கீழ் பல சலுகைகள் இந்த திட்டங்களில் ரூ.144 திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்புகள் மற்றும் 100 ஜிஎம்எஸ் உடனான 2 ஜிபி தரவை நிறுவனம் வழங்கியது. அதோடு ரூ.792 திட்டம் மற்றும் ரூ.1584 என இரண்டு திட்டங்களை 180 நாடகள் வேலிடிட்டி மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி செல்லுபடியை வழங்கியது. பதஞ்சலி திட்டத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து திட்ட வவுச்சர்களையும் சென்னை வட்ட பயனர்கள் ரீசார்ஜ் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டது.

ரூ.551 வவுச்சர், ரூ.349 வவுச்சர் மற்றும் ரூ.447 வவுச்சர்கள் என அனைத்தும் 2020 ஜூலை 31 ஆம் தேதியோடு திரும்பப் பெறுவதாக ஆபரேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.551 டேட்டா திட்டத்தில் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 5 ஜிபி வரை 90 நாட்களுக்கு வழங்கியது. இந்த டேட்டாவானது 80 கேபிபிஎஸ் வேகத்தில் வழங்கியது.

ரூ.599 விலை திட்டம் அறிமுகம்

ரூ.599 விலை திட்டம் அறிமுகம் பிஎஸ்என்எல் சமீபத்தில் ரூ.599 விலை வவுச்சரை அறிமுகப்படுத்தியது. இது வரம்பற்ற குரல் அழைப்பு வசதியையும் 100 எஸ்எம்எஸ்களும் ரூ.551 திட்டம்போல் பயனர்களுக்கு தினசரி 5 ஜிபி தரவை 90 நாட்களுக்கு 80 வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

 தினசரி 1 ஜிபி டேட்டா

தினசரி 1 ஜிபி டேட்டா மேலும் ரூ.349 வவுச்சர் திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், தினசரி 1 ஜிபி டேட்டா அதிவேக தரவு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் என 64 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கியது. விண்வெளி பட்டாம்பூச்சி: விஞ்ஞானிகள் பதிவு செய்த அருமையான காட்சி.! இலவச ரிங் பேக் டோன் சேவை

 இலவச ரிங் பேக் டோன் சேவை

அதேபோல் ரூ.447 திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகள் தினசரி 1 ஜிபி அதிவேக டேட்டாவை 84 நாட்கள் வரை வழங்கியது. அதோடு இதில் இலவச ரிங் பேக் டோன் சேவையையும் நிறுவனம் இந்த திட்டத்தில் வழங்கியது.

 புதிதாக ரூ.147 திட்டம்

புதிதாக ரூ.147 திட்டம் இந்த அனைத்து திட்டத்தையும் நீக்கிய பிஎஸ்என்எல் புதிதாக ரூ.147 திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டமானது 10 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது. அதோடு ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் குரல் அழைப்புகள் முடிந்தவுடன் கட்டணம் வசூலிக்கப்படும் என ஆபரேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிப்பு ரூ.1999 திட்டம், ரூ.247 திட்டம் போன்ற வவுச்சர்களில் கிடைக்கும் கால அவகாசத்தை பிஎஸ்என்எல் அதிகரித்து அறிவித்தது. இது ரூ.429 திட்டத்தில் ஈரோஸ் நவ் சேவையை அறிமுகம் செய்தது. சில திட்டங்களை நீக்கினாலும் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Google+ Linkedin Youtube