இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த அறிவிப்பை அவர் வெளியிட உள்ளார் என்பது பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

கடந்த மாதம் 5 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அந்த விமானங்களுக்கு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மாதத்தில் வரவேற்பு பூஜைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பை இன்று அமைச்சர் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சனை இன்னும் ஒரு நிரந்தர தீர்வை எட்டாத நிலையில் உள்ளது. இது குறித்த முக்கிய முடிவுகளை ராஜ்நாத் சிங் வெளியிடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் சில தினங்களில் சுதந்திர தினம் வரவிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மேற்கொள்ள இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Google+ Linkedin Youtube