கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 21 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் (கடந்த 7ந்தேதி) ஒரே நாளில் 62,538 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருந்தன.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 75 ஆக உயர்ந்தது.

நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு நேற்று 61,537 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  இதனால் மொத்த பாதிப்பு 20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக உயர்ந்தது.  42,518 பேர் உயிரிழந்து இருந்தனர்.

நாட்டில் கடந்த புதன்கிழமை கொரோனா பாதிப்புகள் 19 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது.  அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 18 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது.  இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்குள் ஒரு லட்சம் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு 20 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்த 7ந்தேதி அடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 64,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 53 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு 6 லட்சத்து 28 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 14 லட்சத்து 80 ஆயிரத்து 885 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  ஒரே நாளில் 861 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43,379 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

கடந்த 2 நாட்களில் 20 லட்சத்தில் இருந்து 21 லட்சம் என்ற அளவிற்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Google+ Linkedin Youtube