ஊரடங்கின் 4-ஆம் கட்ட தளர்வில் மெட்ரோ ரெயில்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வாய்ப்பு


கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றாலும் மக்களின் வாழ்வாதாரம் , பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு ஊரடங்கில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஊரடங்கின் மூன்றாம் கட்ட தளர்வுகள் வரும் 31 ஆம் தேதி வரை அமலில் உள்ளன.

செப்டம்பர்  1 ஆம் தேதிக்கு பிறகு  ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும் எனத்தெரிகிறது. 4- ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில்,  மெட்ரோ ரெயில்கள் இயக்க அனுமதியளிக்க வாய்ப்பிருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், மக்கள் அதிகமாக கூடுவதற்கும், பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எனினும், மெட்ரோ ரெயில்களை இயக்குவது குறித்த இறுதி முடிவினை மாநில அரசுகளே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2 -மணி நேரத்திற்கு குறைவான பயண நேரத்தை கொண்ட மெட்ரோ போக்குவரத்தினை மட்டுமே மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Google+ Linkedin Youtube