எல்லை பகுதியில் இந்திய தரப்பில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை இந்திய ராணுவம் விளக்கம்

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. 1962-க்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.  இந்த நிலையில்,  எல்லை தாண்டி வந்து இந்திய ராணுவம் எங்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், சீனாவின் குற்றச்சாட்டை  ந்திய ராணுவம்,  நிராகரித்துள்ளது.  இது குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், “சீனா ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி இந்திய நிலைகளை நோக்கி நெருங்கி வர முயற்சித்ததோடு வானை நோக்கி நோக்கி துப்பாக்கியால் சுட்டது ஆனால், உள்நாட்டு , சர்வதேச சமூகங்களை சீனா தனது அறிக்கைகளால் ஏமாற்ற முயற்சிக்கிறது. இந்த பதற்றமான தருணத்திலும் இந்தியா ராணுவம் மிகவும் நிதானத்தை கடைபிடித்ததோடு, முதிர்ச்சியுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொண்டது” என்று தெரிவித்துள்ளது.

Google+ Linkedin Youtube