ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்றபோது ஆற்றில் படகு கவிழ்ந்தது; 14 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்ற போது ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 14 பக் தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப் படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் கோட்டா மாவட் டத்தில் கட்டோலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திபிரி சம்பால் என்னும் இடத்தில் பிரசித்தி பெற்ற கமலேஷ்வர் மகாதேவ் சிவன் கோயில் அமைந்துள்ளது. குப்தர்களுக்கு பிந் தைய காலத்தில் இந்த கோயில் கட்டப் பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 1,200 ஆண்டு பழமையான இக்கோயில் சிற்பக்கலைக்கும், ஓவியக் கலைக்கும் புகழ்பெற்றது. 7-ம் நூற்றாண்டுக்கும் 9-ம் நூற்றாண்டுக்கும் இடையே இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும் கஜுராகோ கோயிலில் உள் ளது போன்ற அரியவகை சிற்பங்கள் இந்தக் கோயிலில் இடம்பெற்றுள்ளன. கோயிலின் கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கம் சிவப்பு நிற கல்லில் அமைந் துள்ளது தனிச்சிறப்பாகும். நாட்டில் உள்ள முக்கிய சிவ ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பக்தர்கள் இந்த கோயிலுக்கு வர முடியாமல் தவித்து வந்தனர்.

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கமலேஷ்வர் கோயிலுக்கு கடந்த வாரம் முதல் பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை கோயில் நிர்வாகம் கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தானின் கரவுலி என்ற பகுதியைச் சேர்ந்த 45-க் கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று இந்த கோயிலுக்கு வந்தனர். அவர்கள் நேற்று காலை 8 மணி அளவில் சம்பல் நதியில் ஒரு படகில் பயணித்தனர். ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந் துள்ளது. இதில் 30 பேர் வரை நீந்திக் கரை சேர்ந்துவிட்டனர். மேலும் 20 பேரை காணவில்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினரும் போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் மூழ்கியவர்களை தீவிரமாக தேடினர். இந்த விபத்தில் 14 பேர் வரை பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் நேற்று மாலை வரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட் டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படையினரும், தேசிய மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

25 பேர் பயணிக்க கூடிய படகில் சுமார் 50 பேர் பயணம் செய்துள்ள னர். அதனால் படகு பாரம் தாங்கா மல் கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகிக் கப்படுகிறது. மேலும், இந்தப் படகுக் கான உரிமத்தை அதன் உரிமையாளர் புதுப்பிக்கவில்லை என்றும் கூறப் படுகிறது.

நிவாரணம் அறிவிப்பு

இதனிடையே, படகு விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாநில முதல்வர் அசோக் கெலாட், சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீட் புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத் துக்கு முதல்வர் இரங்கல் தெரிவித் துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

விபத்து குறித்து கோட்டா ஊரக மாவட்ட எஸ்.பி. சரத் சவுத்ரி கூறியதாவது:

இதுவரை 5 உடல்களை மீட்டுள் ளோம். 14 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம்.

படகு உரிமையாளரை தேடி வரு கிறோம். படகின் உரிமம் மற்றும்தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கப்படவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை கோட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, மீட்டுப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மீட்கப்பட்டவர் களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தரும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.- பிடிஐ

Google+ Linkedin Youtube