ஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வந்த வெடிபொருட்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வந்துள்ளன.

நீடாமங்கலம் கடைத்தெரு பகுதியில் போட்டோ- வீடியோ ஸ்டுடியோ நடத்தி வருபவர் வீரக்குமார். இவருக்கு நேற்று கூரியரில் பார்சல் ஒன்று வந்தது. அதை வாங்கி பிரித்துப் பார்த்த வீரக்குமார், அதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் வீரக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான போலீஸார், வெடிபொருட்களை பார்சலில் அனுப்பியவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே விவசாயி ஒருவருக்கு 2 தினங்களுக்கு முன் இதேபோல வெடிபொருட்கள் பார்சலில் வந்துள்ள நிலையில், நீடாமங்கலத்துக்கும் வெடிபொருட்கள் பார்சலில் வந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube