உலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், “உலகம் முழுவதும் சுமார் 2.4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 3,28,03,482 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்தாலும், கடந்த இரு வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு வருத்தம் தெரிவித்திருந்தது.

பொருளாதாரத்தைக் காரணம் காட்டி உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தின. இதனைத் தொடர்ந்து ஐரோப்பா போன்ற நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு முன்னரே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

Google+ Linkedin Youtube