நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையில் வடிவேலு !

நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாக்காரர்கள் அதிகம் கூடும் இடத்தில் வடிவேலுவைப் பார்க்க முடிந்ததே அதிசயம்தான். கொஞ்சம் மெலிந்து காணப்பட்ட வடிவேலு நண்பர்கள் மத்தியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மேடையில் கங்கை அமரன் உள்ளிட்ட சிலர் பாடல்கள் பாடி முடித்ததும் மைக் வடிவேலுவின் கைக்கு வந்திருக்கிறது.

சில எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடிக் கூட்டத்தை மெய் மறக்க வைத்தவர், தொடர்ந்து ’உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற ’கர்ணன்’ படப் பாடலை மிகவும் உருக்கத்தோடு பாடியிருக்கிறார். அதில் வரும் ‘வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ வரிகளைப் பாடும்போது கண்கள் கலங்கி சில நிமிடங்கள் பாடுவதையே நிறுத்தியிருக்கிறார். அவர் கலங்கியதைக் கண்டு, மற்றவர்களும் கலங்க, சுதாரித்துக் கொண்டு, ‘உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டௌன்; நான் பத்து வருஷமாவே லாக்டௌன்லதானே இருக்கேன்’ என அந்த நிமிடத்திலும் எல்லோரையும் சிரிக்கவைத்திருக்கிறார்.

Google+ Linkedin Youtube