24 மணி நேரத்தில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்தியா: 24 மணி நேரத்தில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை 1,59,30,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் மொத்தம் 2,104 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்ட்டிராவில் 568 பேரும், டெல்லியில் 249 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக 1,84,657 பேருக்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,34,54,880 பேர் மீண்டுள்ளனர்.


 

Google+ Linkedin Youtube