18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க அரசுக்கு ரூ.67,193 கோடி செலவாகும்: இந்தியா ரேட்டிங்ஸ் அறிக்கையில் தகவல்

18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க அரசுக்கு ரூ.67,193 கோடி செலவாகும்: இந்தியா ரேட்டிங்ஸ் அறிக்கையில் தகவல்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் ஜனவரியில் தொடங்கிய தடுப்பூசி விநியோகம் பல்வேறு கட்டங்களாக விரிவு படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் கட்டமாக மே 1 முதல் 18 வயது மேற்பட்டோருக்குத் தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளது.

மொத்த இந்திய மக்கள் தொகையான 133.3 கோடியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் எண் ணிக்கை 84.2 கோடியாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் தடுப் பூசி வழங்க ஆகும் செலவு இந்திய ஜிடிபியில் 0.36 சதவீதம் ஆகும் என இந்தியா ரேட்டிங்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 0.12 சதவீதமாகவும், மாநிலங்களின் பங்கு 0.24 சதவீதமாகவும் இருக்கும்.

மதிப்பளவில் மொத்த செலவு ரூ.67,193 கோடி எனக் குறிப்பிட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.20,870 கோடியும், மாநிலங்கள் ரூ.46,323 கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

தற்போது தடுப்பூசி கொள் கையில் மத்திய அரசு மாற்றங் களை அறிவித்துள்ளது. தடுப்பூசிநிறுவனங்கள் உற்பத்தியில் 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், 50 சதவீதத்தை சந்தையிலும் விற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை 21.4 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய் யப்பட்டுள்ளதாகவும் அதற்கு ரூ.5090 கோடி செலவாகியிருப் பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 155.4 கோடி டோஸ் தடுப்பூசி தேவையாக உள்ளது. இதற்கு ரூ.62,103 கோடி ஆகும் எனவும் கூறப்படுகிறது.

அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதற்கான செலவு மொத்த ஜிடிபியில் குறைவாக இருந்தாலும், எவ்வளவு விரை வாக தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம் என இந்தியா ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.

Google+ Linkedin Youtube