இதுவரை முகக்கவசம் அணியாத 5, 38, 663 பேர் மீது வழக்குப் பதிவு!

இதுவரை முகக்கவசம் அணியாத 5, 38, 663 பேர் மீது வழக்குப் பதிவு!

தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 24, 482 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

கொரோனா 2ஆம் அலை பரவத் தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டன. முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 5, 38, 663 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் நேற்று மட்டும் 24, 482 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நேற்று மட்டும் 566 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 784 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சென்னை காவல் துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 1,201 வழக்குகள் பதியப்பட்டு 2, 08, 200 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது சென்னை காவல்துறை சார்பில் 18, 363 வழக்குகள் பதியப்பட்டு, இதுவரை 34, 68, 800 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நடந்தவர்கள் மீது நேற்று மட்டும் 16 வழக்குகள் பதியப்பட்டு 8 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை மொத்தம் 246 வழக்குகள் பதியப்பட்டு 1, 17, 600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

Google+ Linkedin Youtube