தமிழகத்தில் ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு; மே 7 காலை 9 மணிக்கு பதவியேற்பு

தமிழகத்தில் ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு; மே 7 காலை 9 மணிக்கு பதவியேற்பு

தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மே 7 ஆம்தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக நேற்று தேர்வு அவர் செய்யப்பட்டார். 

இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரில் லால் புரோகித்தை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 133 எம்.எல்,ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அத்துடன் புதிய அமைச்சர் பட்டியலையும் ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார். அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். 

Google+ Linkedin Youtube