ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் iOS 15 ஆப்பிரேடிங் சிஸ்டம் அறிமுகம்

ஆப்பிளின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் iOS 15 ஆப்பிரேட்டிங் சிஸ்டம் அறிமுகமாகி உள்ளது. ஐபோன் பயனர்களுக்கு பிடித்த அம்சங்கள் பல இந்த இயங்கு தளத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயனர்களின் பிரைவசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த இயங்கு தளம் கட்டமைக்கப்பட்டுள்ளதாம். இப்போதைக்கு இதன் பீட்டா வெர்ஷன் மட்டுமே அறிமுகமாகி உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் அதிகார்ப்பவர்வமாக இது வெளியாக உள்ளது. 
தற்போது  iOS 14 இயங்கு தளத்தில் இயங்கி வரும் ஐபோன்கள் அனைத்தும்  iOS 15 இயங்கு தளத்தில் அப்டேட் வெர்ஷனாக செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 6S மற்றும் ஐபோன் SE தொடங்கி அண்மையில் வெளியான மாடல்க வரை அனைத்து ஐபோன்களுக்கும் இந்த  iOS 15 பொருந்தும். 
இப்போதைக்கு இந்த இயங்குதளத்தை பீட்டா புரோபைல்ஸ் வலைதளத்தின் மூலமாக  iOS 15 டெவலப்பர் பீட்டா வெர்ஷனாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Google+ Linkedin Youtube