ரூ.75 கோடி சம்பளம் 5 புதிய படங்களில் சிவகார்த்திகேயன்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெற்றி பெற்ற கனா படத்தை தயாரித்து இருந்தார். மேலும் சில படங்களை தயாரித்து வருகிறார்.
தற்போது டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கொரோனா முடக்கத்தால் ஓ.டி.டி.யில் வெளியிடலாமா என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர். தனது படங்களை எடுத்த சில தயாரிப்பாளர்களின் கடனை சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதாகவும், இதனால் அவர் கடன் சுமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கடனில் இருந்து மீள சிவகார்த்திகேயன் ஒரே பட நிறுவனம் தயாரிக்கும் 5 புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி வீதம் 5 படங்களுக்கும் சேர்த்து ரூ.75 கோடி சம்பளம் பேசி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனை இயக்கும் 5 இயக்குனர்கள் யார் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

Google+ Linkedin Youtube