உலகப்பட விழாவில் நயன்தாரா படம்

நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ளார். குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவை மையப்படுத்தி தயாராகி உள்ளது.
இந்த படம் தொடர்ந்து உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வருகிறது. நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.
பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் கூழாங்கல் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது. உக்ரைனில் ஆண்டு தோறும் நடைபெறும் கெய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் கூழாங்கல் தேர்வானது.
இந்த நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் கூழாங்கல் படம் தற்போது தேர்வாகி இருக்கிறது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
உடுமலையில் ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் அந்த பெண்களை கொன்று பிணங்களை வாய்க்காலில் வீசி சென்றுள்ளார். இதையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குடும்பத்தினருக்கு தெரியாமல் சிறிய வீட்டில் 10 வருடங்களாக காதலியை மறைத்து வைத்து இருந்த காதலன்

Google+ Linkedin Youtube