Category Archives: உலக செய்திகள்

கொரோனா பரவலுக்கு நடுவே இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தும் ரஷ்யா

இரண்டாம் உலகப் போர் வெற்றியை குறிக்கும் வகையில் மிகப் பெரிய ராணுவப் பேரணியை ரஷ்யா புதன்கிழமை நடத்துகிறது. மே 9ஆம் தேதி நடக்கவிருந்த இந்த பேரணியை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தள்ளிவைத்தார்.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி இல்லை: சவுதி முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் வரவேற்பு

கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் யாத்ரைக்கு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று சவூதி அரேபிய அரசு அறிவித்திருப்பதை மத்திய கிழக்கு நாடுகள் வரவேற்றுள்ளன.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் -சீனா

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே, மோல்டோவில் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும், அந்த பேச்சுவார்த்தை நேர்மறையான மற்றும் சுமூகமான ஒரு சூழலில் நடைபெற்றது என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

H1B விசா, கிரீன் கார்டு தடை நீட்டிப்பு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப்.

ஒரே ஒரு ஆய்வகம்: கரோனாவால் நெருக்கடிக்கு உள்ளாகும் சூடான்

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான், கரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் போதிய மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்காத நிலையில், மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

கரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 90% பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்: நேபாளம்

நேபாளத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 90% பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

இருபுறமும் ராணுவ குவிப்பால் பதற்றமான சூழலில் இந்திய - சீனா எல்லை பகுதி!

இருபுறமும் ராணுவ குவிக்கப்பட்டு இருப்பதால் எல்லை பகுதியில் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது: எர்டோகன்

கரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி சில இடங்களில் தோற்றுவிட்டது. எனினும் அடுத்து வரும் மாதங்களில் மீண்டு வருவோம் என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கரோனா பலி 3,382 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு நாடு முழுவதும் 153 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3, 382 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் டிசம்பர் மாதமே கரோனா இருந்தது: ஆய்வில் தகவல்

இத்தாலியில் டிசம்பர் மாதத்திலேயே கரோனா வைரஸ் இருந்ததாக அந்நாட்டு தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினராக 2 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்வு: வாக்கெடுப்பில் 184 வாக்குகள் பெற்று வெற்றி

ஐக்கிய நாடுகள் சபையின் வலிமை மிகுந்த பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினர் நாடுகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் இந்திய 193 வாக்குகளில் 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

இந்தியா கடும் எதிர்ப்பு: 3 இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து வெளியிட்ட வரைபட மசோதா: நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

இந்தியாவின் 3 எல்லைப்பகுதிகளை இணைத்து நேபாளம் தன்னிட்சையாக வெளியிட்ட வரைபடத்தின் அரசியல் திருத்த மசோதா இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மேல்சபையில் எதிர்ப்பின்றி நிறைவேற்றியது.

இந்திய - சீன எல்லை மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தென்கொரியாவின் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென்கொரியா எச்சரிக்கை

அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடகொரியா நடந்துகொண்டால், தங்களின் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஈரானில் கரோனா பாதிப்பு 1,92,439 ஆக அதிகரிப்பு

ஈரானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,92,439 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அலட்சியம் செய்யாமல் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.