இந்தியாவை குறிவைக்கும் சீனாவின் ஏபிடி ஹேக்கர்கள்

சீனாவின் ஏபிடி எனப்படும் ஹேக்கர்கள் குழு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் மீது சைபர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக 2018 ம் ஆண்டில் இந்தியா போன்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்திய சைபர் பாதுகாப்பு கம்பெனியான பயர்ஐ இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், சீனாவின் ஏபிடி.,க்கள் அவ்வப்போது தங்களின் இடங்களை மாற்றக் கூடியவர்கள். இவர்கள் தற்போது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை குறிவைத்துள்ளனர். 2018 ம் ஆண்டில் இந்தியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சைபர் தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இவர்கள் யார், எங்கிருந்து இந்த தாக்குதலை நடத்துகிறார்கள், எதற்காக நடத்துகிறார்கள் என்பதை துல்லியமாக கண்டறிவது மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. பொதுவாக தேர்தல் தேதிகளுக்கு முன்னரே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இவர்களின் அடுத்த நோக்கம் அரசு மற்றும் தனியார் இணையதளங்கள் ஆகும். 2018 ல் ரான்சம்வேர் பாதிப்புக்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Google+ Linkedin Youtube