சர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்

சர்வதேச அளவிலான பொருளா தார வளர்ச்சி போட்டியில் இந்தியா 58வது இடத்தில் உள்ளதாக சர்வ தேச பொருளாதார மையம் வெளி யிட்ட பட்டியலில் குறிப்பிட்டுள் ளது. அமெரிக்கா இந்தப் பட்டி யலில் முதலிடத்தில் உள்ளது.

உலக நாடுகளுக்குக்கிடையே பொருளாதார வளர்ச்சி ரீதியிலான போட்டி நிலவரம் குறித்து சர்வ தேச பொருளாதார மையம் ஒவ் வோராண்டும் பட்டியல் வெளி யிடுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச பொருளாதார போட் டிக் குறியீடு பட்டியலில் இந்தியா 62 புள்ளிகள் பெற்று 58வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 இடங் கள் முன்னேறியுள்ளது. இந்தியா வின் பொருளாதார போட்டி நாடான சீனா இந்தப் பட்டியலில் 28வது இடத்தில் உள்ளது.

பிரமிப்பான வளர்ச்சி

சர்வதேச பொருளாதார மையம் இது குறித்து தெரிவிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்கத் தக்கதாக உள்ளது. இந்த வளர்ச்சி பட்டியலில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை ஜி20 நாடுகளில் எந்த நாடும் அடையவில்லை. ஆனால் பிரிக்ஸ் நாடுகளில் சீனா முன்னிலையில் 28வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 43வது இடத்தில் உள்ளது” என்று கூறியுள்ளது.

மேலும் தனது அறிக்கையில், “சீனா ஏற்கெனவே பெரிய அள வில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு களில் தொடர்ந்து பெருமளவி லான முதலீடுகளைக் குவித்து வருகிறது. இந்தியா ரொம்பவும் பின்தங்கிவிடவில்லை என்றாலும், அதன் வளர்ச்சி திறன் குறை வான அதிகாரத்துவத்தால் குறைந்துவிடுகிறது,” என்று கூறி யுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத் தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும், ஜெர்மனி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

Google+ Linkedin Youtube