கடலூரில் சாலை விபத்து; 3 பேர் பலி

கடலூர்,

கடலூரின் வேப்பூர் அருகே ரெட்டை குறிச்சி என்ற பகுதியில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்துள்ளது.  அந்த கார், லாரி ஒன்றின் மீது பின்புறம் திடீரென மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.  அவர்கள் அகமது ஷெரீப், நிஷா மற்றும் அசீமா பானு என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  விபத்தில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Google+ Linkedin Youtube