காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை

ஜம்மு,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் வெரினாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  ராணுவ வாகனங்களில் வந்திறங்கிய அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அவர்களுக்கு ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.  தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.  

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா நகரில் லஸ்சிபோரா பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  தொடர்ந்து நடந்த சண்டையில் மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டார்.  அவர்களிடம் இருந்து 3 ஏ.கே. ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Google+ Linkedin Youtube