மும்பையில் கனமழை; சென்னை வரும் விமானங்கள் காலதாமதம்

தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவாகியுள்ளது.  வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் ஆனது 24 மணிநேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும்.  இந்த புயல் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதியில் ஜூன் 13ந்தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

புயலால் மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் மும்பையில் இருந்து சென்னை வரும் 2 விமானங்கள் 2 மணிநேரம் காலதாமதமுடன் வந்து சேருகின்றன.  இதனால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.  அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் உறவினர்களும் நீண்டநேரம் காத்திருக்கின்றனர்.

Google+ Linkedin Youtube