தமிழக அரசு புதிய திட்டம்- இந்தியாவில் முதன்முறையாக எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி

கோவை,

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிமோ காக்கல் மற்றும் இரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு இன்று தொடங்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

விழாவில் அவர் பேசியபோது,  “இந்தியாவிலேயே முதன்முறையாக ஒன்றரை கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நிமோகாக்கல் ஊசி போடப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ஊசியின் விலை ரூ.4 ஆயிரம். 4 ஊசிகள் போடப்பட வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் வாங்கப்படுவதில்லை” என்று அவர் தெரிவித்தார். 

ஒன்றரை கிலோவுக்கும் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உள் உறுப்புகள் போதிய வளர்ச்சி இன்றி காணப்படும். குறிப்பாக நுரையீரல்  பாதிப்பு அடைந்திருக்கும் என்பதால் குழந்தைகள் சுவாசிப்பதற்கு சிரமம் கொள்ளும். இதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக காணப்படும். இதில் நுரையீரல் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக நிமோ காக்கல் தடுப்பூசி குழந்தை பிறந்த ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மற்றும் 15-வது மாதம் என 4 முறை போடப்படும். 

Google+ Linkedin Youtube