வாரிசுகளும்... இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும்...

கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன் அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக  வாரிசுகள் அதிக அளவில் தேர்வாகி உள்ளனர்.

* மத்திய அமைச்சராக இருக்கும் பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் அருண் தாக்கூர் வெள்ளிக்கிழமை இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார்.

* பிசிசிஐ முன்னாள் தலைவர் நாராயணசாமி சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் வியாழக்கிழமை தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவராக  தேர்வு செய்யப்பட்டார்.

*  பிசிசிஐ முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷாவின் மகன் ஜெய்தேவ் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத் தலைவரானார்.

* மூத்த கோவா நிர்வாகி வினோத் பாட்கேவின் மகன் விபுல் கோவா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

* முன்னாள் பி.சி.சி.ஐ துணைத் தலைவர் சிராயு அமினின் மகன் பிரணவ், பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

* மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்  சமீபத்தில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளராக இருந்தார் அமித் ஷா தான்  தலைவர்.

Google+ Linkedin Youtube