நடிகர் விஜய் ஜனநாயக நாட்டின் குடிமகன்: யார் என்ன பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை -எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது  கூறியதாவது:-

நடிகர் விஜய் ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அதற்கு எதிராக யார் பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு தற்போது எடுத்துவரும் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பிகில் படத்தை வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றார்.

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் தமிழக அரசை மறைமுக சாடினார். அதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube