அமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா ஊடகங்கள் தகவல்

வாஷிங்டன்,

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது.  இதற்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு,  அணுஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென வடகொரியா தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், அணுஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா - வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Google+ Linkedin Youtube