இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம் - ராஜ்நாத் சிங்

பாரீஸ்,

இந்தியாவுக்கான முதல் ரபேல் போர் விமானம் பாதுகாப்புத்துறை மந்திரி  ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பிரான்ஸ் நாட்டின் மெரிக்னா நகரில் நடைபெற்ற விழாவில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:- 

இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இந்தியாவுக்கான முதல் ரபேல் போர் விமானம் திட்டமிட்டப்படி எங்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

இது எங்கள் விமானப்படைக்கு மேலும் பலத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். ரபேல் விமானத்தின் செயல்பாடுகளைக் காண ஆர்வமாக உள்ளேன்.  இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. ரபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் எழுதினார்.

Google+ Linkedin Youtube