நாங்குநேரி இடைத்தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

நெல்லை,

தமிழகத்தில் காலியாக உள்ள  நாங்குநேரி, விக்கிரவாண்டி  ஆகிய 2  தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதை அடுத்து அரசியல்  கட்சிகள் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 24-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Google+ Linkedin Youtube