27 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக குறைவு

பெய்ஜிங்

சீனாவின் பொருளாதாரம் 27 ஆண்டுகளில்  இல்லாத அளவு  மூன்றாவது காலாண்டில்  மிக மெதுவாக குறைந்து உள்ளது. சீன பொருளாதாரம்  மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) புள்ளி விவரங்கள் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் 6.0 சதவீதமாக உள்ளது. இது இரண்டாவது காலாண்டில் 6.2 சதவீதமாக இருந்தது.

இது 1992 ஆம் ஆண்டிலிருந்து மிக மோசமான காலாண்டு பொருளாதார குறியீட்டை  குறிக்கிறது, இருப்பினும் சீனாவின் பொருளாதார இலக்கு இந்த ஆண்டில் 6.0 முதல் 6.5 சதவீதமாக உள்ளது.

இந்த புள்ளிவிவரங்களை தேசிய புள்ளிவிவர பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ ஷெங்யோங், நாடு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெருகிவரும் அபாயங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. எனினும் நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையையும் ... மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் பராமரித்து வருகிறது என கூறினார்.

சீன  வர்த்தக உபரி மற்றும் தொழில்நுட்பத் திட்டங்கள்  அமெரிக்க வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதாரம் 2018-ல் 6.6 சதவீதமாக இருந்தது.

அமெரிக்காவின் வர்த்தகப் போர் உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதால் சீனாவின் வர்த்தக கூட்டாளிகளும், முதலீட்டாளர்களும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சீன  பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Google+ Linkedin Youtube