ஜெய்ப்பூர் ஏரியில் கொத்து கொத்தாக பறவைகள் இறந்தது ஏன்?

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே உள்ள சாம்பர் ஏரியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடுகள் உள்பட பல இடங்களில் இருந்து வந்த பறவைகள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. அதன் இறப்புக்கான காரணத்தை அறிய இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் ஆய்வு நடத்தி, அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருக்கிறது.அந்த அறிக்கை தொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி லால்சந்த் கட்டாரி கூறும்போது, “அவியன் போட்டுலிசம் என்ற நரம்பு மற்றும் தசைகளை கடுமையாக தாக்கும் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுதான் பறவைகள் இறந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. இது ஒருவகை ‘பாக்டீரியாவால்’ பரவக்கூடியது. இந்த நோயால் மற்ற பறவைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பது ஆராயப்பட்டு, 735 பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 368 பறவைகள் நலம்பெற்று உள்ளன. அதில், முழுமையாக குணமடைந்த 36 பறவைகள் பறக்கவிடப்பட்டன” என்றார்.

இதுகுறித்து, முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறுகையில், “பறவைகள் இறப்பு குறித்த உடனடி நடவடிக்கையால் நிலைமை சீரமைய தொடங்கி உள்ளது” என்றார்.

Google+ Linkedin Youtube